அதிமுக , தேமுதிக கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமென பிரேமலதா தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிகவுக்கு தொகுதிப் பங்கீடு முடிவு செய்து கூட்டணி தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக ஆழ்வார் பேட்டையில் உள்ள கிரவுண்ட் பிளாசா நட்சத்திர விடுதிக்கு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓபன்னீர்செல்வம், இணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்கள் மற்றும் தேமுதிக நிறுவனத் தலைவர் விஜயகாந்த் பொருளாளர் பிரேமலதா துணைப் பொதுச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் சென்று ஆலோசனை நடத்தினர் .
இதில் அதிமுகவின் கூட்டணியில் தேமுதிகவுக்கு 4 பாராளுமன்ற தொகுதிகள் என தொகுதி பங்கீடு செய்யப்பட்டது . மேலும் வருகின்ற 21 சட்ட மன்ற இடைத்தேர்தலில் தேமுதிக அதிமுகவிற்கு ஆதரவு அளிக்குமெனவும் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து கூட்டாக நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பிரேமலதா , வருகின்ற 40 பாராளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் . இந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடருமென தெரிவித்தார்.