முகக்கவசம் அணியாதவர்களிடம் 8542 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனா தொற்று பரவலின் காரணமாக உலக நாடுகள் முழுவதிலும் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தொற்றின் தாக்கத்தால் பல நாடுகளின் பொருளாதாரம் பெருமளவு சரிவை சந்தித்துள்ளது. இதனால் பொருளாதாரத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் அந்தந்த நாடுகளில் எடுக்கப்பட்டு வருகின்றது. அவ்வகையில் ஸ்பெயினில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மீட்க முடிவு செய்துள்ளனர். இதனால் அங்கு இருக்கும் தீவுகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் பொதுவெளியில் அவர்கள் அனைவரும் முகக்கவாசம் அணிய கட்டாயப்படுத்தப்பட்டு உணவகத்திற்கு வெளியே சாப்பிடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறுபவர்களுக்கு இந்திய மதிப்பில் ரூபாய் 8,542 (90 பவுண்ட்) வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அபராதம் வழங்கப்படுவதற்கு முன்பு அவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும் என்றும் மீண்டும் மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்க படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு விதிமுறைகளை மீறும் அவர்களிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று காவல்துறையினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது