சென்னையில் இளைஞர் ஒருவர் தன்னை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வருவதாக கூறி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில், முதன் முதலில் இன்ஸ்டாகிராமில் இளம்பெண் ஒருவர் எனக்கு மெசேஜ் செய்தார். அதற்கு நான் பதிலனுப்பினேன். எங்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு ஒருநாள் தனக்கு அவர் வீடியோ கால் செய்தார்.
நான் முதலில் முகத்தை காட்டியபடி பேசிக்கொண்டிருந்தேன். பின் அவர் ஆடைகளை களைந்து காட்டுமாறு தெரிவிக்க நானும் அவ்வாறே செய்தேன். அதனை அவர் காணொளியாக பதிவு செய்து மற்றவர்களிடம் ஷேர் செய்து உள்ளார். இந்நிலையில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் அந்த காணொளியை காட்டி பணம் தருமாறு என்னை மிரட்டினார்.
தரவில்லை என்று கூறினால் உறவினர்களிடம் பரப்பி விடுவேன் என்று மிரட்டினார். இதையடுத்து அவருக்கு ரூபாய் 59,000 பணத்தை நான் அளித்தேன் இருப்பினும் அவர் தொடர்ந்து பணம் தருமாறு என்னை மிரட்டி வருகிறார். எனக்கு மிகவும் மன உளைச்சல் ஆக இருக்கிறது. காவல்துறையினர் தான் இதிலிருந்து எனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.