அமெரிக்காவில் பள்ளிகளில் ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்கள் பொதுவெளிகளில் முகக்கவசமின்றி செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. உலகநாடுகளிலேயே கொரோனாவால் அமெரிக்கா தான் மிகுந்த பாதிப்படைந்திருந்தது. எனவே தற்போது அங்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் 12 வயதிலிருந்து 15 வயதிற்குள் இருக்கும் சிறுவர்களுக்கு பைசர் தடுப்பூசியளிக்க அனுமதித்திருந்தது. இதனையடுத்து 12 வயதுக்கு அதிகமான சிறுவர்களுக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருப்பதால் பள்ளிகளும் திறக்கப்பட்டிருக்கின்றன.
பொதுவெளியில் தடுப்பூசி செலுத்தியவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் பள்ளியில் ஆசிரியர்களும், மாணவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.