Categories
தேசிய செய்திகள்

“அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும்”… டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்!

 மக்கள் ஒவ்வொருவரும் முகக்கவசங்கள் கட்டாயமாக அணிய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளது. இருப்பினும் கொரோனா இந்தியாவில் நாளுக்குநாள் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் டெல்லியும் ஓன்று. டெல்லியில் இன்று ஒரேநாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தங்கள் வீட்டை விட்டு வெளியேறும் மக்கள் ஒவ்வருவரும் முககவசங்கள் கட்டாயமாக அணிய வேண்டும் என்றும், துணியையும் பயன்படுத்தலாம் என்றும்  கூறியுள்ளார். மேலும்  முககவசங்கள்  அணிவது கொரோனா வைரஸின் பரவலைக் கணிசமாகக் குறைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரசால்  மொத்தம் 5,194 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 149 பேர் பலியாகியுள்ள நிலையில், 402 பேர் குணமடைந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Categories

Tech |