கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த மாஸ்க் challange மேற்கொள்ளுமாறு சென்னை மக்களிடம் மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
கொரோனாவிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக தமிழக அரசு தொலைக்காட்சி மூலமாகவும், சுவரொட்டிகள் மூலமாகவும், அவ்வப்போது ஒலிபெருக்கிகள் மூலமாகவும் கைகளை கழுவுமாறும், முக கவசம் அணிந்து வெளியே வருமாறும், பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்திக் கொண்டே தான் இருக்கின்றது. ஆனால் பொது மக்கள் கடைபிடிக்க மறுக்கின்றனர்.
கடந்த வாரத்திலிருந்து முக கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறப்பட்டு வந்தபோதிலும், பொதுமக்கள் சிலர் இன்னும் முக கவசம் அணியாமல் வெளியே வருவதை காணமுடிகிறது. ஆகையால் தற்போது புதிய சவால் ஒன்றை சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி, முகநூல் மற்றும் ட்விட்டர் இல் பொது மக்கள் முக கவசம் அணிந்ததை செல்பி எடுத்து #wearmaskchallange என்ற hashtag உடன் சென்னை மாநகராட்சியின் முகவரியை பின்னூட்டமாக இணைத்து பதிவிடுமாறு அறிவித்துள்ளது.
சமூக வலைதளங்ளால் நமது ஒற்றுமையின் பலத்தை பலமுறை காட்டியுள்ளோம். அந்த வகையில், கொரோனா விழிப்புணர்வுக்காக நாம் ஒருங்கிணைந்து இந்த செல்ஃபி புகைப்படங்களை நாம் பதிவிட்டு கொரோனா நோயை ஒழிப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்வோம் என்று தெரிவித்துள்ளது.