Categories
மாநில செய்திகள்

அடுத்த 3 நாட்களுக்கு…. 20 மாவட்டங்களில் கனமழை…. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!!

அடுத்த 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

கடந்த சில நாட்களாகவே தென்மேற்கு பருவக் காற்றால் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று இரவுக்குள் சேலம், திருச்சி, பெரம்பலூர், கரூர், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் அடுத்த 3 நாட்களுக்கு 20 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும், மாவட்டங்களின் பட்டியல் சில மணி நேரத்தில் வெளியிடப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Categories

Tech |