Categories
பல்சுவை வானிலை

“கேரளாவில் குறைந்தது பருவமழை” வானிலை ஆய்வு மையம் தகவல்..!!

கேரளாவில் பெய்த பருவ மழை வழக்கத்தை விட குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து கேரளா எல்லையை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கன்னியாகுமரியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருவதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் அதிகளவில் கொட்டுகின்றது. அதே போல மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கன்னியாகுமரி, நெல்லை, தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களின் மழைக்கு வாய்ப்புள்ளது.

Image result for பருவமழை

மேலும் கேரள மாநிலத்தில் தற்போது தொடங்கியுள்ள பருவ மழை தொடங்கியுள்ள  பருவமழையின் அளவு குறைந்துள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் ஜுன் மாதம் முதல் வாரத்தில் பெய்த மழையின் அளவு வழக்கத்தை விட குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் , ஆலப்புழா, கோட்டயம், திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களிலும் மழையின் அளவு வழக்கத்தை விட மழை அளவு குறைந்துள்ளதாக பதிவாகியுள்ளது என்று கூறியுள்ளது.

Categories

Tech |