கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான அட்மிசன் இன்று முதல் ஆன்லைனில் தொடங்கவிருக்கிறது.
கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது கடந்த மார்ச் 23 ஆம் தேதி முதல் தற்போது வரை ஆறாவது கட்ட நிலையில் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி வளாகங்கள் அனைத்திலும் அட்மிஷன் நடைபெற தாமதம் ஏற்பட்டது. தற்போது பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான முடிவுகள் வெளியான நிலையில், முதற்கட்டமாக பொறியியல் பட்டப்படிப்பை படிக்க விரும்பும் மாணவர்கள் கல்லூரியில் விண்ணப்பிக்கும் விதமாக ஆன்லைன் அப்ளிகேஷன் ஓபன் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து இன்று முதல் அரசு, தனியார் கலை அறிவியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து பதிவு செய்வதற்கான நடைமுறை இன்று முதல் தொடங்குகிறது. அதன்படி, அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கு www.tngasa.com , www.tndceonline.org உள்ளிட்ட அரசு இணையதளங்களிலும், அரசு பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளுக்கு www.tngptc.in , www.tngptc.com முக்கிய இணையதளங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.