சாராயம் காய்ச்சுவதற்காக வெள்ளத்தை பதுக்கி வைத்திருந்த நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தாழ்மதூர் கிராமத்தில் மர்ம நபர்கள் சாராயம் காய்ச்சுவதற்காக வெல்லம் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவர் கொட்டகையில் சாராயம் காட்டுவதற்காக 30 கிலோ எடையுடைய 20 மூட்டை வெல்லத்தை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனை வலைவீசி தேடி வருகின்றனர்.