Categories
மாநில செய்திகள்

கோயில் பெயரில் இணையதளம் தொடங்கி ,மோசடி – நீதிபதி வேதனை …!!

தமிழ்நாட்டில் கோயில் பெயரில் போலி இணையம் தொடங்கி மோசடி நடைபெற்றதற்கு ஐகோர்ட் வேதனை தெரிவித்து இருக்கின்றது.

தமிழகத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சென்னை கபாலீஸ்வரர் கோவில், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் பழனி முருகன் கோயில் உட்பட இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான பல்வேறு பிரசித்தி பெற்ற கோவில்களின் பெயர்களில் தனிநபர்கள்…  கோவில் நிர்வாகத்திற்கு சம்பந்தமில்லாத,  அரசுக்கு சம்பந்தமில்லாத தனிநபர்கள் இணையதளம் தொடங்கி அந்த கோவில் சம்பந்தமான வரலாறுகளை வெளியிட்டுள்ளனர்.

குறிப்பாக அங்கு நடைபெறுக் கூடிய பல்வேறு பூஜைகள்,  பூஜை கட்டணங்களை பதிவிட்டு வசூல் செய்து வருகின்றனர். இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது போன்ற நபர்களால் இழப்பீடு ஏற்படுவது மட்டுமல்லாமல், கோவில்களின் வரலாறு மாற்றி அமைக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த நபர்கள் யார் என்று உரிய ஆய்வு செய்து,  நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில் ஒரு சில இணையதளங்களை  இயக்குவர்கள் எங்கிருந்து இருக்கிறார்கள்? யார் என்ற எந்த விவரமும் இல்லை. எனவே இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றுதான் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனு இன்று நீதிபதி மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்திருந்தது. விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர்கள் கார்த்திகேயன் மற்றும் வெங்கடேஷ ராஜா ஆஜராகி,  தமிழகத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் இது போன்ற நடைபெறும் மோசடிகள்  ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் ஆயிர கணக்கில் வசூல்லிக்கவில்லை,  பல லட்சம்,  கோடிகள் என வசூல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே இதுகுறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று தான் வாதிட்டனர். இதனை தொடர்ந்து இது தான் நீதிபதிகள் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

கோவில்கள் என்பது தனியாருக்கானது, தனி நபருக்கு சொந்தமானது கிடையாது. இங்கு வர கூடிய பக்தர்களுக்கு ஆனது. குறிப்பாக கோவில்கள் எப்போதுமே வியாபாரத் தலமாக மாற்றி விடக்கூடாது என்ற கருத்துக்களை தெரிவித்த நீதிபதிகள்,  இதுபோன்ற இணையதளங்களை ஏற்கனவே ஒரு வழக்கில் முடக்க சொல்லி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அந்த வழக்கோடு இந்த வழக்கையும் இணைத்து பட்டியலிடுகின்றோம். இணையதளங்கள் முடக்குவது மட்டுமல்லாமல்,  இந்த இணையதளத்தை இயக்குபவர்களை கண்டறிந்து,  அவர்கள் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால் இவர்கள் ஆயிரக்கணக்கில் வசூல் செய்தார்கள், தற்போது கோடிகணக்கில் முறைகேடுகள் அதிகரித்துள்ளது. எனவே இந்த வழக்கில் சைபர் கிரைம் ஏடிஜிபியை எதிர் மனுதாரர் ஆக்குகின்றோம்.  இணையதளங்கள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கில் மத்திய அரசையும் எதிர்மனுதாரராக இணைத்து உத்தரவிட்டு, வழக்கு என்னுடைய விரிவான விசாரணைக்காக வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்கள்.

Categories

Tech |