ஒடிசா மாநிலம் கேந்திரபாரா மாவட்டத்தில் திருமணத்திற்கு அளிக்கப்பட்ட விருந்தில் உணவு உண்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலம் கேந்திராபாரா மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் மாட்டியா கிராம மக்கள் பலருக்கும் உணவு அளிக்கப்பட்டது. உணவு அருந்திய பின்னர் அதில் பலருக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் குமட்டல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி கூறியுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக திருமண நிகழ்ச்சியை நடத்தியவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.