Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எவ்ளோ சொன்னாலும் கேக்க மாட்டீங்களா..! விதிமுறைகளை மீறிய செயல்கள்… அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கொரோனா ஊரடங்கு விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக திருமண மண்டபத்திற்கு அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் இருதயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் நேற்று காலை திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. அதில் நகராட்சி அலுவலகமானது 50 பேர் மட்டுமே கலந்து கொள்வதற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் விதிமுறைகளை மீறி ஏராளமானோர் அந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். மேலும் சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் கூடியுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த சுகாதார ஆய்வாளர் பாண்டி செல்வம், நகரமைப்பு அலுவலர் பார்த்தசாரதி, நகராட்சி ஊழியர்கள் ஆகியோர் அந்த திருமண மண்டபத்திற்கு சென்று பார்த்தபோது 100-க்கும் மேற்பட்டோர் சமூக இடைவெளியை பின்பற்றாமல் அங்கு குவிந்துள்ளனர். இதையடுத்து அந்த திருமண மண்டபத்திற்கு ஊரடங்கு விதிமுறைகளை மீறியதற்காக அதிகாரிகள் “சீல்” வைத்துள்ளனர்.

Categories

Tech |