Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“வாரம் இரு முறையாவது இந்த காயை சாப்பிடுங்கள்”… கொஞ்சம் கசப்புதான்… ஆனால் நன்மை அதிகம்..!!

சுண்டைக்காய் இது இயற்கையாக கசப்பு தன்மை கொண்டிருந்தாலும் பல ஊட்டச்சத்துகளை கொண்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் இந்த காய்களை நாம் உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம். வாரத்திற்கு இரு முறையாவது இந்த காயை நம் உணவில் சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். இதில் புரதம், கால்சியம் மற்றும் இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. ரத்த சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதில் மிகவும் சிறந்தது. இது ரத்தத்தை சுத்திகரித்து உடல் சோர்வை நீக்கி உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பெண்களின் எலும்புகளை வலுப்படுத்துகிறது.

தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பதற்கு இந்த காயை சாப்பிட்டு வந்தால் நன்றாக பால் சுரக்கும். நீரழிவு நோயால் பல பிரச்சனையை சந்தித்து வருபவர்களுக்கு இந்த காய் நன்மையைத் தரும். சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்து பொடியாக்கி சோற்றுடன் கலந்து சாப்பிட்டால் நீரழிவு நோய் பிரச்சனை தீரும். சுவாசம் சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள் அடிக்கடி சுண்டைக்காயை உணவில் சேர்த்துக் கொள்வதால் இது இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Categories

Tech |