Categories
திருநெல்வேலி மாநில செய்திகள்

நெல்லை தம்பதிக்கு “வீரதீர விருது”… மாவட்ட ஆட்சியர் பரிந்துரை..!!

கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டியடித்தவயதான நெல்லை தம்பதியினருக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை போட்டு நெரித்துள்ளனர்.

Image result for திருடனை விரட்டிய நெல்லை தம்பதி

இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த செந்தாமரை வெளியில் வந்து சற்றும் பயப்படாமல் துணிந்து கையில் கிடைத்த செருப்பு, நாற்காலி உள்ளிட்டவற்றை கொண்டு கொள்ளையர்கள் இருவரையும் தாக்கினார். அவருடன் சேர்ந்து சண்முகவேலும் நாற்காலியை கொண்டு தாக்கினார். கொள்ளையர்கள் இருவரும் கையில் அரிவாள் வைத்திருந்தும் பயப்படாமல் தைரியமாக எதிர்த்து விரட்டினர்.இதில் செந்தாமரைக்கு மட்டும் கையில் சிறிது அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இருந்தும் கூட போராட்டத்தை அவர் விடவில்லை. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களால் வைரலாகி பரவி வந்த நிலையில்,

Image result for வீர தீர விருது

துணிச்சலாக போராடிய  வயதான தம்பதியினரை நெல்லை மாவட்ட எஸ்பி நேரில் சென்றும் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் உள்ளிட்டோர் இருபக்கத்திலும் பாராட்டி வந்தனர் இந்நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் தம்பதியினருக்கு வீர தீர செயலுக்கான விருதை வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு பரிந்து வைத்துள்ளதாகவும் நாளை நடைபெற நாளை சென்னையில் நடைபெற உள்ள சுதந்திர தின விழாவில் அவர்களுக்கு தம்பதியினருக்கு வீர தீர செயலுக்கான விருது வழங்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

Categories

Tech |