இந்தியாவிற்கு வரும் பறவைகளை வரவேற்க பறவை ஆர்வலர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை பறவைகள் வலசை காலமாகும். பொதுவாக இந்த காலத்தில் வெளிநாட்டில் இருக்கும் பறவைகள் இந்தியாவிற்கு இறை தேடி வரும் என கூறுவர். இவ்வருடம் இந்த காலத்தில் வர இருக்கும் பறவைகளை வரவேற்பதற்காக சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளம் பறவை ஆர்வலர்கள் சுவரெங்கும் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். சாம்பல் வாலாட்டி, மண்கொத்தி போன்ற பறவைகள் மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பா பகுதிகளிலிருந்து வருகின்றன.
அவ்வாறு இறை தேடி வரும் பறவை இனங்களுக்கு எந்த ஒரு இடையூறும் பொதுமக்கள் கொடுக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிற்கு இறை தேடி வரும் பறவைகள் விவசாயத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் பூச்சி மற்றும் புழுக்களை சாப்பிட்டு பிப்ரவரி, மார்ச் மாதத்தில் அவற்றின் இருப்பிடத்திற்கே திரும்பிச் செல்கின்றன.