உலகம் முழுவதும் நாளை 2023-ம் ஆண்டை வரவேற்க பொதுமக்கள் ஆயத்தமாகி வருகிறார்கள். இன்று நள்ளிரவு 12 மணி முதல் புத்தாண்டு கொண்டாட்டம் தொடங்குகிறது. இருப்பினும் கொரோனா பரவலின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தமிழக மக்களுக்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தெரிவித்து தன்னுடைய twitter பக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதனுடன் அனைத்து துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது. உலக அளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன் மிக்கவர்களாக தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-ல் வீறுநடை போடுவோம். புத்தாண்டே வருகே! புதுவாழ்வு தருக! இணையற்ற இளைய வாழ்வு வெல்க என்று பதிவிட்டுள்ளார்.
அனைத்துத் துறைகளிலும் எழுச்சியை நோக்கிய ஆண்டாக 2022 அமைந்தது.
உலகளவில் அனைத்திலும் தலைசிறந்து விளங்கும் திறன்மிக்கவர்களாகத் தமிழ்நாட்டு இளைஞர்களை உருவாக்கும் இலக்கை அடைய 2023-இல் வீறுநடை போடுவோம்!
புத்தாண்டே வருக, புதுவாழ்வு தருக!
இணையற்ற இளைய ஆற்றல் வெல்க!#HappyNewYear2023 pic.twitter.com/MkhXnMUEqm
— M.K.Stalin (@mkstalin) December 31, 2022