செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு பாடல் வெளியாகி செம வைரலாகி வருகிறது
சர்வதேச அளவில் நடைபெறும் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் பங்கேற்க இருக்கின்றனர். இந்த போட்டிக்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு வர இருக்கிறார்.
கடந்த 7-ம் தேதி சென்னையில் உள்ள நேப்பியர் பாலத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு பாடல் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த வரவேற்பு பாடலை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இதனையடுத்து ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் வரவேற்பு பாடலை ஏ.ஆர் ரகுமான் வெளியிட்டுள்ளார். இந்த பாடலில் முதல்வர் மு.க ஸ்டாலின், ஏ.ஆர் ரகுமான், விஸ்வநாதன் ஆனந்த் உட்பட பலர் நடித்துள்ளனர்.