சென்னை வந்த சீன அதிபருக்கு மாஸ் வரவேற்பு பெற்ற நிலையில் கிண்டி தனியார் விடுதிக்கு சென்றடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் இறங்கிய சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு வழங்கப்பட்டது. அதை தெடர்ந்து தமிழக ஆளுநர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் கொடுத்து வரவேற்றனர் . பின்னர் சென்னை விமான நிலையத்திற்குள் தமிழர் பாரம்பரியத்தை உணர்த்தும் வகையில் கரகாட்டம் , ஒயிலாட்டம் , தப்பாட்டம் , பரதநாட்டியம் என மேள தாளம் முழங்க வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதை கண்டு இரசித்த சீன அதிபர் கையசைத்து கிண்டி தனியார் ஓட்டலுக்கு கிளம்பினார்.அவருக்கென்று வந்த பிரத்யேக காரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் புடைசூழ அவர் கிண்டி நட்சத்திர விடுதிக்கு சென்று சென்றார்.
சாலையெங்கும் பள்ளி மாணவ , மாணவியரும் இந்திய-சீன உறவை வலுப்படுத்தும் விதமாக அவரை உற்சாகமாக வரவேற்கும் விதமாக கையில் இரு நாட்டு கொடிகளை அசைத்து வரவேற்றனர். நட்சத்திர விடுதியில் தங்கிய அதிபர் இன்று மாலை தமிழர்களின் மிகச்சிறந்த தொன்மை வாய்ந்த சிறப்பு படைபான மாமல்லபுரத்தை கண்டி இரசிக்கின்றார். பிரதமர் நரேந்திர மோடியுடன் அங்கு சந்திக்கின்ற இருவருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை முறைசாரா பேச்சுவார்த்தை சந்திப்பு நடக்கிறது. அனைத்து இடங்களிலும் அவருக்கான உற்சாக வரவேற்பு வழங்கப்பட்டு பிரதமர் மோடியும் , சீன அதிபரும் இன்றும் நாளையும் என மொத்தம் 6 மணி நேரம் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச இருக்கின்றார்.தற்போது சீன அதிபர் கிண்டி தனியார் விடுதிக்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.