சசிகலாவை வரவேற்று அதிமுக நிர்வாகி ஒருவர் அதிரடியாக அதிமுக கட்சியிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா கடந்த 4 வருட சிறை தண்டனைக்கு பிறகு கடந்த 27ம் தேதி விடுதலையானார். இந்நிலையில் சசிகலாவிற்கு ஆதரவாக அமமுக கட்சியை சேர்ந்தவர்கள் அவரை வரவேற்று போஸ்டர் அடித்து, கோவில்களில் சிறப்பு பூஜை செய்தனர். இதையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் அதிமுக நிர்வாகி சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடித்ததால் உடனடியாக கட்சியிலிருந்து அதிமுக தலைமை நீக்கியது.
இந்நிலையில் இன்று திருச்சி வடக்கு மாவட்ட ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அந்தநல்லூர் ஒன்றிய முன்னாள் மாவட்ட கவுன்சிலர் புலியூர் இரா. அண்ணாதுரை, சசிகலாவுக்கு ஆதரவாக போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார்.இந்நிலையில் கட்சியின் கொள்கை கோட்பாட்டை மீறியதாக கூறி அண்ணாதுரையை அடிப்படை உறுப்பினர் பதவயில் இருந்து அதிமுக தலைமை நீக்கியுள்ளது.