சசிகலாவை வரவேற்க அவருடைய தொண்டர்கள் 1000 வாகனங்களில் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வரும் சசிகலா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து தற்போது அவருடைய சிறைத்தண்டனை காலம் முடிவடைய உள்ளது.
இதையடுத்து வருகிற 27-ஆம் தேதி விடுதலை ஆக உள்ளார் என்பதால் அவரை வரவேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து தொண்டர்கள் ஆயிரம் வாகனங்களில் செல்ல இருக்கின்றனர். இதற்காக ஓட்டல்களில் அறைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது சசிகலாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது என்பது குறிப்பிடதக்கது.