அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் எடப்பாடியாரே என்று போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் அதிமுக கட்சி நிர்வாகிகள் கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் அதிமுக எம்பி, எம்.எல்.ஏ க்கள் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் மக்களவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, உட்க்கட்சி பிரச்சனை, கட்சியின் தலைமை, பொது குழுவை கூட்டுவது தொடர்பாக விவாதிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கட்சிக்கு ஒற்றை தலைமை தேவை என்று ராஜன் செல்லப்பா கூறியது கட்சிக்குள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது
இந்நிலையில் கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக அதிமுக பொதுச்செயலாளராக பதவியேற்க வாருங்கள் இதுவே தொண்டர்களின் எதிர்பார்ப்பு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்து அதிமுக அலுவலகத்திற்கு வெளியே ஒட்டப்பட்டுள்ளது. பொது செயலாளராக பதவி ஏற்க வேண்டும் என்று வற்புறுத்தி போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த போஸ்டரை கொளத்தூர் கே ஆறுமுகம் ஓட்டியுள்ளார். இவர் அதிமுகவின் 65வது வட்ட உறுப்பினராக இருக்கிறார்.