3,228 பயனாளிகளுக்கு 30 கோடியே 86 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்துள்ளார்.
தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் 3,228 பயனாளிகளுக்கு 30 கோடியே 81 லட்சம் மதிப்புடைய நல திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில் பல துறைகளின் சார்பாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அதியமான் கோட்டத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இந்த விழாவிற்கு கலெக்டர் திவ்யதர்ஷினி தலைமை தாங்கியுள்ளார். அதன் பின் வருவாய் அலுவலர் அனிதா, உதவி கலெக்டர் சித்ரா விஜயன் மற்றும் செந்தில்குமார் எம்.பி போன்றோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முதல் கட்டமாக 156 பயனாளிகளுக்கு 96 லட்சத்து 81 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புடைய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இம்மாவட்டத்தில் மொத்தமாக 7 ஆயிரத்து 808 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது என கலெக்டர் கூறியுள்ளார். இவற்றில் 16,795 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் தகுதி உள்ள அனைத்து மனுக்களும் தீர்வு காணும் படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பிறகு கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட செவிலியர்கள், காவல்துறை மற்றும் மருத்துவர்கள் ஆகிய முன்கள பணியாளர்களின் பணிகளை சிறப்பிக்கும் விதத்தில் ஊக்கத்தொகை வழங்க இருக்கிறோம் என கலெக்டர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஸ்வரி பெரியசாமி கலெக்டர் திவ்யதர்ஷனிடம் கூறும் போது, இந்நிகழ்ச்சி பற்றி அதிகாரிகள் தனக்கு தாமதமாக தகவல் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என கலெக்டர் திவ்யதர்ஷினி கூறியுள்ளார்.