வேப்பிலையில் என்னென்ன பயன்களும், மருத்துவ குணங்களும் இருக்கிறது என்று பார்க்கலாம்.
வேப்பிலை போட்டு கொதிக்க வைத்த நீரில் குளித்து வந்தால் சிரங்கு, நமைச்சல், புழுவெட்டு, சோரியாசிஸ் உட்பட பல நோய்கள் குணமாகும்.
தலைவலி பிரச்சினைகள் தீர வேப்பிலையை எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து தலைக்கு தேய்த்து குளிக்கலாம்.
கட்டி வீக்கத்தை நீக்க வேப்பிலையை அரைத்துப் போட்டால் விரைவில் குணமாகும்.
வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து போட்டால் பித்த வெடிப்புகள், நகசுத்தி போன்ற பிரச்சனைகளுக்கு பலன் கிடைக்கும்.
வேப்பிலையை நீரில் கொதிக்க வைத்து, அறிய பின் அந்த நீரை கொண்டு முகம் மற்றும் கை, கால்கள் கழுவி வந்தால் சரும பிரச்சனைகள் குணமாகும்.
வேப்பம் விதையுடன் வெல்லம் சேர்த்து காலை, மாலை என இரு வேளை சாப்பிட்டு வந்தால் உள் மூலம், வெளி மூலம் தீரும்.
மாதம் ஒரு முறை வேப்பிலையை சாப்பிடும் போது வயிற்றில் உள்ள பூச்சிகள் வெளியேறும்.