Categories
கிரிக்கெட் விளையாட்டு

சபாஷ்! 3வது டெஸ்டில் இந்திய அணியில்….. தமிழக வீரர் நடராஜன்…. பிசிசிஐ அறிவிப்பு…!!

மூன்றாவது டெஸ்ட் தொடரில் உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் சிறப்பாகப் பந்துவீசிய தமிழக வீரர் நடராஜன். அணித் தேர்வுக் குழுவினரையும், பயிற்சியாளர் ரவிசாஸ்திரியையும் கவர்ந்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி வீரர்கள் ஒருநாள் தொடரை 1.2 என்ற கணக்கில் இழந்தது. இந்நிலையில் டி20 தொடரில் 2.1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்று அதனை சமன் செய்துள்ளது.

மேலும் மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் ஜனவரி-7 ஆம் தேதியும், 4வது டெஸ்ட் ஜனவரி 15ஆம் தேதி ஆரம்பிக்கின்றன. இதற்காக இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள செய்தியில், பாக்ஸிங் டே டெஸ்டுக்கு முன்பு ஷாமிக்குப் பதிலாக ஷர்துல் தக்குர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் காயமடைந்த ஷமி, உமேஷ் யாதவ் இருவரும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சை பெறுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |