ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் தற்போது இறுதி கட்டத்தைக் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதில் இன்று (அக்.18) நடைபெறும் 36ஆவது லீக் ஆட்டத்தில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.அபுதாபியிலுள்ள ஷேக் ஸாயித் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இப்போட்டியில் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்பதால், இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில் தொடக்க ஜோடி ரோஹித் சர்மா 9 ரன்னில் வெளியேறி ஏமாற்றம் கொடுத்தார். பின்னர் வந்த யாதவ் 0 ரன்னில் வெளியேற சிறிது நேரத்தில் இஷான் கிஷானும் 7 ரன்னில் ஆட்டமிழந்தார்.
பின்னர் குவின்டன் டிக்காக்குடன் ஜோடி சேர்ந்த குணால் பாண்டியா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.சிறப்பாக ஆடிய டிகாக் அரைசதம் கடந்து 53 ரன்னில் ஆட்டமிழக்க,ஹார்டிக் பாண்டியா 8, குணால் பாண்டியா34 ரன்னில் வெளியேறினார். 7 விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நைல் 24(12)*, பொல்லார்ட் 34(12)* ஜோடி பஞ்சாப் பந்து வீச்சை பறக்க விட்டது. இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 குவித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்பில் அனைவரும் சொதப்பிய நிலையில் கேப்டன் கே.எல் ராகுலின் ஆட்டத்தால் 6 விக்கெட் இழப்பிற்கு 176ரன்கள் குவித்தது. இதனால் ஆட்டம் சூப்பர் ஓவருக்கு சென்றது.