Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

சும்மா, சும்மா அறிக்கை விடும் ஸ்டாலின் – கடுப்பாகி சீறிய முதல்வர் …!!

அனைத்துக்கட்சி கூட்டம் நடத்த அனைவரும் மருத்துவர்களா ? என்று முதல்வர் விமர்சித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பணிகள் குறித்து சேலத்தில் மாவட்ட ஆட்சியருடம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் எதிர்க்கட்சியினர் விமர்சனம் குறித்த கேள்விக்கு, எதிர்கட்சினர் பேசுவதை பொருட்படுத்துவது கிடையாது. பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது. இன்றைக்கு கடுமையாக போராடிக் கொண்டிருக்கின்றோம். உயிரோடு விளையாடுவதெல்லாம் சரியில்லை. எதிர்க்கட்சித் தலைவர்கள் பொறுப்போடு நடந்து கொள்ள வேண்டும். தினந்தோறும் எதாவது அறிக்கை விடுவது. அரசை குற்றம் சொல்வது.

அரசு ஒண்ணா செயல்படுக் கொண்டு இருக்கின்றது. ஒட்டுமொத்த இயந்திரமும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அனைத்து அதிகாரிகளும் இரவு பகல் பாராமல் தன் குடும்பத்தை விட்டு, தன் உயிரை துச்சமென மதித்து மக்களுக்காக பணியாற்றிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் குற்றம் சொல்லுகின்ற நேரமா இது. உயிரை காக்க வேண்டிய நேரம். அதைக் காப்பதற்கு வழிமுறை சொன்னால், நல்ல கருத்து. அதை விட்டுட்டு அங்கு ஒரு குறை, இங்க ஒரு குறை என சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்காது என்று எதிர்க்கட்சியினர் விமர்சனத்துக்கு பதிலடி கொடுத்தார்.

அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தி ஆலோசிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வந்ததற்கு பதிலளித்த தமிழக முதல்வர்,அரசியல் கட்சிகள்  என்ன ஆலோசனை சொல்ல முடியும். அவர்கள் எல்லாம் மருத்துவர்களா ? இதில் ஆலோசனை சொல்கின்றவர்கள் மருத்துவர்கள். மருத்துவ வல்லுநர்கள் சொல்லுகின்ற ஆலோசனைப்படி செயல்பட்டால் தான் நோயை கட்டுப்படுத்த முடியும். அரசியல்வாதிகள் என்ன பேச முடியும். இருமாநில பிரச்சனையா ? நீர் பிரச்சனையா? அப்படினா அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அதில் முடிவு எடுத்து செயல்படுத்தனும்.

இது முழுக்க முழுக்க மருத்துவத்துறை சார்ந்த பணி. மருத்துவ குழு அமைக்கப்பட்டது. மருத்துவ வல்லுனர்கள் , மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், உலக சுகாதார அமைப்பு சொல்கின்ற வழிமுறைகளை பின்பற்றி அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. இதில் என்ன தவறு இருக்கிறது. இது மருத்துவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனை, அவர்கள் சொல்லுகிற வழிமுறைகளைப் பின்பற்றினால் தான் இந்த நோய் பரவலை தடுக்க முடியும்.

அதனை அரசு முழுமையாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. வேண்டும் என்றே தங்களை முன்னிலைப் படுத்தவேண்டும், இதுலயும் அரசியல் ஆக்க வேண்டும் என்று தான் பார்க்கிறார்கள். அது நடக்காது, எங்களைப் பொறுத்தவரைக்கும் மக்களுக்கு பணி செய்ய வேண்டும். பணி செய்கின்ற மருத்துவர்களுக்கு முழுமையான பாதுகாப்பு கொடுக்க வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைந்து வீடு திரும்புவதற்கு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். இதுதான் எங்களின் தலையாய பணி.

உங்களை அப்படிச் சொல்லிக் கொள்வது ...

இதை பார்க்கும் வரை எதிர்க்கட்சியினர் சொல்வதை எடுத்துக் கொள்ளமாட்டோம், எங்களுக்கு மக்கள் தான் முக்கியம், மக்களின் உயிர் தான் முக்கியம். இதற்காக நல்ல கருத்துக்களை சொன்னால் எடுத்து செய்வதற்கு தயாராக இருக்கின்றோம். இதில் அரசியல் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த காலகட்டத்தில் இதெல்லாம் பேசு நேரமா ? எந்த மாநிலத்தில் இப்படி பேசுறாங்க ? தமிழ்நாட்டில் தான் இப்படிப்பட்ட அரசியல் நடக்கிறது. எதிர்க்கட்சிகள் எல்லாம் வேண்டிக்கொள்வது அரசுக்கு ஒத்துழைப்பு கொடுங்கள், பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணை நில்லுங்கள் என்று முதல்வர் தெரிவித்தார்.

Categories

Tech |