Categories
மாநில செய்திகள்

“கிணற்று நீர் தீப்பற்றி எரியுதா”…? இதுதான் காரணம்… குமரியில் பரபரப்பு..!!

கன்னியாகுமரி அருகே கேரள எல்லையில் வீட்டு உபயோக கிணற்றில் பெட்ரோல் கலந்த நீர் வருவதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பன்னசமூடு,  புலியூர் சாலையில் கோபி என்பவரது வீட்டிற்கு உள்ள அந்த கிணற்றில் இருந்து கடந்த 6 நாட்கள் பெட்ரோல் வாசம் வந்துள்ளது. கிணற்றிலிருந்து நீரை இறைத்து பற்ற வைத்தபோது அது தீப்பற்றி எரிந்து இருக்கிறது. கோபியில் வீட்டுக்கு எதிரே பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. அந்த பெட்ரோல் பங்கில் நிலத்தடியில் பதிக்கப்பட்டுள்ள பெட்ரோல் கிடங்கில் கசிவு ஏற்பட்டு அது கிணற்றுக்கு வரும் நீர் பாதையில் கலந்திருப்பதாக கோபி குற்றம்சாட்டும் நிலையில், அங்கு இரு மாநில அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

கோபியின் வீடு மட்டுமின்றி, அப்பகுதியில் உள்ள பல குடிநீர் கிணறுகளிலும் பெட்ரொல் கலந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Categories

Tech |