ட்ரம்பிற்கு அளிக்கப்பட்ட கொரோணா சிகிச்சையை ஜெர்மனியும் பின்பற்றப் போவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் முந்தைய அதிபராக இருந்த டிரம்ப் கடந்த அக்டோபர் மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதன்பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குறுகிய காலத்திலேயே குணமடைந்து வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவமனையில் ஆன்டிபாடி சிகிச்சை அளிக்கப்பட்டது.
ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட இரண்டு ஆண்டிபாடிக்களை சேர்த்து டிரம்ப்பிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மனித உலில் எந்த உறுப்பையும் பாதிக்குமோ அந்த உறுப்பை இந்த ஆன்டிபாடி கட்டிப்போட்டு விடும். இதனால் கொரோனாவால் பாதிக்கப்படும் உறுப்புகள் பாதுகாக்கப்படும். இதனால்தான் டிரம்ப் குறுகிய காலத்திலேயே கொரோனாவிடம் இருந்து மீண்டு விரைவில் வீடு திரும்பினார்.
ஆகையால் இதே சிகிச்சை முறையை ஜெர்மனியும் பின்பற்றப் போவதாக ஜெர்மன் சுகாதாரத் துறை அமைச்சர் ஜென்ஸ் ஸ்பான் தெரிவித்துள்ளார். ஒரு டோஸின் விலை 2000 யூரோக்கள் என்ற கணக்கில் 2 லட்சம் டோஸ்களை 400 மில்லியன் யூரோக்கள் கொடுத்து ஜெர்மன் வாங்கியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.