ராணுவ ஆட்சியை நடைமுறைப்படுத்தி இருக்கும் புர்கினோ பாசோ, மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பிலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு, இது பற்றி வெளியிட்ட அறிக்கையில், மக்கள் தேர்ந்தெடுத்த ஆட்சியை கலைத்துவிட்டு, அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியிருப்பதால் தங்களின் கூட்டமைப்பிலிருந்து புர்கினா பாசோ தற்காலிகமாக விலக்கி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு, மேற்கு ஆப்பிரிக்க கூட்டமைப்பு, கடந்த 2020 ஆம் வருடத்தில், ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய காரணத்தால், மாலி நாட்டையும், கடந்த வருடத்தில் கினியா நாட்டையும் விலக்கி வைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.