மேற்கு வங்காளத்தில் 2 தொகுதி வேட்பாளர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்ததால் தேர்தல் நடத்தப்படாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து நடத்தியது. அதில் 2 தொகுதி வேட்பாளர்கள் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ள காரணத்தால் அந்த தொகுதிகளில் மட்டும் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் 292 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 213 தொகுதிகளில் அபார வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.
இந்த இரண்டு தொகுதிகளுக்கும் கொரோனா நோய் பரவல் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. குறிப்பாக கொரோனா நோய் பரவலுக்கு தேர்தல் ஆணையம் தான் முக்கிய காரணம் என்று சென்னை உயர்நீதிமன்றம் குற்றம்சாட்டியுள்ளது. இதனால் மீதமுள்ள இரண்டு தொகுதிகளுக்கு கொரோனா பரவல் குறைந்த பிறகு வாக்குப்பதிவு நடத்தப்படும் என்று தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளனர்.