மேற்கு வங்காளத்தில் 35 தொகுதிகளுக்கான எட்டாவது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது.
மேற்கு வங்காளத்தில் எட்டாவது கட்ட வாக்குப்பதிவு 35 தொகுதிகளுக்கு இன்று நடைபெறுகிறது. இதுவே இறுதி கட்ட வாக்குப்பதிவு ஆகும். அந்த மாநிலத்தில் முதல் கட்ட தேர்தல் கடந்த மார்ச் 27ஆம் தேதி நடந்த நிலையில் 8ஆவது கட்ட தேர்தல் இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது. மால்டா பாகம் 2, முர்ஷிதாபாத் பாகம் 2, கொல்கத்தா வடக்கு, பிர்பும் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 35 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது.
இந்த மொத்தம் 283 வேட்பாளர்கள் இறுதி கட்ட தேர்தலில் களம் இறங்குகின்றனர். இதில் 35 பெண்களும் அடங்குவர். இவர்களின் வெற்றி 84 லட்சத்து 77 ஆயிரத்து 728 வாக்குகள் தீர்மானிக்கப் போகின்றது. மேலும் இந்த தேர்தலை சந்திக்க இருக்கும் வேட்பாளர்களில் நுகர்வோர் விவகார துறை மந்திரி சதான் பாண்டே, மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை மந்திரி ஷாஷி பாஞ்சா உள்ளிட்டோரும் அடங்குவர்.
இந்த தேர்தலில் மொத்தம் 11 ஆயிரத்து 870 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். மேலும் தேர்தல் நடைபெறும் 35 தொகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த இறுதி கட்ட வாக்குப்பதிவு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மூன்றாவதாக ஆட்சியைத் தக்க வைப்பதற்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.