Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில்…. விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு… பலத்த கட்டுப்பாடு….!!

அசாமில் 48.26 என்ற சதவீத வாக்குகளும், மேற்கு வங்காளத்தில் 58.15 சதவீத வாக்குகளும் 2 மணி அளவில் பதிவாகியுள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மாநில தேர்தலோடு இணைந்து மேற்கு வங்காளம், அசாம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் சட்டசபை தேர்தல் நடைபெறுகின்றது. அதில் வருகின்ற 6-ந் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி, கேரள மாநிலங்களில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகின்றது. அதன்பின் இரண்டு மாநிலங்களிலும் முதல்கட்ட தேர்தல் சென்ற 27-ஆம் தேதி நடைபெற்றுள்ளது.

அதில் மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்கள் மற்றும் அசாமில் 3 கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அப்போது மேற்குவங்காளத்தில் மொத்தம் 294 தொகுதிகள் உள்ள நிலையில் 30 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடந்துள்ளது. அதேபோன்று அசாமில் மொத்தம் 126 தொகுதிகளில் 47 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. இன்று மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் 2-வது கட்ட தேர்தல் நடந்து கொண்டிருக்கின்றது. இன்று காலை 7 மணியில் இருந்து அசாம் 39 தொகுதிகள் மற்றும் மேற்கு வங்காளம் 30 தொகுதிகள் என 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

அசாமில் இன்று தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமாக உள்ள இடமாகும். அதனால் அங்கு பலத்த பாதுகாப்புபடை போடப்பட்டுள்ளது. பின்பு மேற்கு வங்காளத்திலும் இன்று தேர்தல் நடைபெறும் அனைத்து தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கு வங்காளத்தில் இன்று தேர்தல் நடைபெறும் 30 தொகுதிகளிலும் சுமார் 75 லட்சம் பேர் ஓட்டு போடுகிறவர்கள் ஆவார். 197 பேர் தேர்தல் பணிகளை செய்து வருகின்றனர். 10,620 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு அதிக அளவில் பதட்டம் நிறைந்த பகுதிகளாக இருப்பதால் 651 கம்பெனி மத்திய படைகள் பாதுகாப்பிற்காக அமர்த்தப்பட்டு உள்ளது.

முதல்-மந்திரி மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்தி கிராமத்தில் இன்று தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கி ஓட்டுப்பதிவு நடைபெற்று வருகின்றது. அந்த தொகுதிகளில் 355 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதிகளிலும் பதட்டம் நிறைந்தவையாக அறிவிக்கப்பட்டு அந்த தொகுதிகளில் மட்டுமே 22 கம்பெனி மத்திய படையினர் பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டுள்ளனர். மேலும் டிரோன் கேமரா மூலம் தேர்தல் நடக்கும் இடங்களை கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

மம்தா பானர்ஜியை எதிராக சுவெந்து அதிகாரி தேர்தலில் போட்டியிடுகின்றார். இவர் மம்தாவிற்கு நீண்ட காலமாக அரசியல் உதவியாளராக இருந்து வந்தார். ஆனால் சில காலங்களுக்கு முன்பு திரிணாமுல் காங்கிரஸிலிருந்து விலகி பாரதீய ஜனதாவில் இணைந்துவிட்டார். தொகுதியில் சுவெந்து அதிகாரியின் குடும்பத்தினருக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது. எனவே அங்கு மிகவும் பதட்டமான நிலை நிலவுகின்றது.

இன்று காலையில் பல இடங்களிலும் வன்முறை நடந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஏஜென்ட் ஒருவரை புகுந்து தாக்கி அவரின் வீட்டை சூறையாடப்பட்டுள்ளது. அதே போன்று இன்னொரு ஏஜென்டை வாக்குச்சாவடிக்கு செல்ல விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். காங்கிரஸ் தொண்டர் ஒருவர் மிட்னாப்பூரில்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் இன்று நடத்தப்பட்ட தேர்தலில் மொத்த தொகுதிகளில் காங்கிரசுக்கு மிகுந்த செல்வாக்கு இருக்கின்றது. அதனால் நடத்தப்பட்ட தேர்தலில் 23 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றியை கைப்பற்றியது. அதன்பின் ஐந்து இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது.

காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலா முதல் இடங்களில் வென்றுள்ளது. அசாமில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற 39 தொகுதிகளில் 4 மந்திரிகள், துணை சபாநாயகர் ஆகியோர் தேர்தல் களத்தில் இருக்கின்றனர். இதற்கு அடுத்ததாக அசாமில 6-ந் தேதி 3-வது கட்டத் தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த தேர்தலுடன் அசாமில் தேர்தல் பதிவு நிறைவடைகின்றது. மேற்கு வங்காளத்தில் இந்த மாதம் 29-ந் தேதி வரை 6 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளது. அசாமில் 2 மணி அளவில் 48.26 சதவீத வாக்குகள் விறுவிறுப்பாக பதிவாகியுள்ளன. மேற்கு வங்காளத்தில் 58.15 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.

Categories

Tech |