Categories
தேசிய செய்திகள்

கொல்கத்தா ஏர்போர்ட்டில் திடீர் சந்திப்பு…. மோடியின் மனைவிக்கு ‘கிப்ட்’ கொடுத்த மம்தா பானர்ஜி..!!

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மோடியின் மனைவியை சந்தித்து சேலையை பரிசாக வழங்கியுள்ளார்.  

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேச டெல்லி செல்ல கொல்கத்தா விமான நிலையத்திற்கு  நேற்று வந்துள்ளார். அதேவேளையில்  பிரதமர் மோடியின் மனைவி ஜசோதா பென், கொல்கத்தாவில் 2 நாள்  பயணத்தை முடித்துவிட்டு ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்துக்கு செல்வதற்கு கொல்கத்தா விமான நிலையம் வந்துள்ளார்.

Image result for west bengal chief minister mamata banerjee has met modi's wife and gifted saree

ஜசோதா பென்னை கண்டதும் முதல்வர்  மம்தா பானர்ஜி சந்தித்துப் பேசினார். இருவரும் சிறிது நேரம் பேசி நலம் விசாரித்ததாக தெரிகிறது. பின்னர் மம்தா பானர்ஜி தான் வைத்திருந்த சேலையை நினைவு பரிசாக யசோதா பென்னுக்கு வழங்கினார். பிரதமர் மோடியையும்,  மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக அரசையும் மம்தா பானர்ஜி கடுமையாக தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில் அவரது மனைவியை சந்தித்து கிப்ட் கொடுத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Categories

Tech |