தேசிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நடப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு முனைப்புக் காட்டி வருகிறது. வங்கதேசம் போன்ற அண்டை நாடுகளிலிருந்து நபர்கள் சட்டத்திற்குப் புறம்பாக இந்தியாவுக்குள் ஊடுருவுவதைத் தடுக்கவே இந்த மசோதா நிறைவேற்றப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். மேலும் இந்த என்.ஆர்.சி எனப்படும் குடிமக்களின் தேசியப் பதிவு, நடவடிக்கை நாடுமுழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் அமித் ஷா மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், மேற்கு வங்க மாநில சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இவ்விவகாரம் குறித்து ஆரம்பத்திலிருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்த மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தேசிய குடியுரிமை மசோதாவை மேற்கு வங்க அரசு ஒருபோதும் ஏற்காது, மேற்கு வங்கத்தில் என்.ஆர்.சி. நடவடிக்கை நடைபெற அனுமதிக்க மாட்டோம் எனத் தெரிவித்துள்ளார். சர்வாதிகார நடவடிக்கையான என்.ஆர்.சி நடவடிக்கை மனிதத்தன்மை அற்றது என்று கூறியுள்ள மம்தா, என்.ஆர்.சி. தொடர்பாக மேற்கு வங்க மாநிலத்தைச் சேராத பலரும் பல்வேறு போலி வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர், அதை நம்ப வேண்டும் என்றுள்ளார்.