Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்… மேலும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ… கொரோனாவுக்கு பலி…!!

மேற்கு வங்காளத்தில் மேலும் ஒரு எம்எல்ஏ கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேலும் ஒரு எம்.எல்.ஏக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கிழக்கு மிட்னாபூரின் ஏக்ரா தொகுதி எம்.எல்.ஏவான சமரேஸ் தாஸ்(71) கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இதனை அடுத்து மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.

அதன்பின் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் அவருக்கு ஏற்கனவே இதயம் மற்றும் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் இன்று உயிரிழந்து விட்டார். அவரது மறைவுக்கு கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி இரங்கல் தெரிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், எம்.எல்.ஏவுமான தமோனாஸ் கோஷ் (60) சென்ற ஜூன் மாதம் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |