Categories
கிரிக்கெட் விளையாட்டு

எதிர்காலத்த பத்தி கவலை இல்ல… செமையா ஆடுறாங்க… பொல்லார்ட் பெருமிதம்..!!

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டிக்கு பிறகு பேசிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட், “எங்கள் அணியின் எதிர்காலம் பற்றி இனி கவலை இல்லை” என்றார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், நேற்று (டிச.22) நடந்து முடிந்த கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி, ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

“இந்த தோல்வி எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கின்றது. இருப்பினும் நான் எனது அணி வீரர்களை நினைத்து மகிழ்ச்சியடைகிறேன். இன்றைய போட்டியில் எங்கள் அணி வீரர்கள் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்துத் துறைகளிலும் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர். ஆனால் இந்திய அணி சவாலை எளிதில் எதிர்கொண்டு சர்வதேச கிரிக்கெட்டின் வலிமையான அணி என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது”.

மேலும் அவர் கூறுகையில், “பெரும்பாலான திறமைகள் எங்களது அணி வீரர்களுக்கு உள்ளன. அதிலும் பேட்டிங்கில் ஹெட்மையர், ஹோப், பூரானும், பந்துவீச்சில் ஷெல்டன் காட்ரோலும் சிறப்பாக செயல்பட்டனர். இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் தனது எதிர்காலத்தை நோக்கி நகர்ந்துவருகிறது. என்னை பொறுத்த வரை இது எங்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளது” என தெரிவித்தார்.

Categories

Tech |