Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை…அணிகள் மோதிய டெஸ்ட் தொடர் …மழையால் பாதிப்பு …!!!

வெஸ்ட் இண்டீஸ்- இலங்கை அணிகளுக்கிடையே நடந்த ,கடைசி போட்டியின் 3-வது நாளில், மழையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

ஆன்டிகுவாவில் நடைபெற்று வரும், கடைசி மற்றும் 2வது டெஸ்ட் போட்டியில் , வெஸ்ட் இண்டீஸ் – இலங்கை அணிகள் மோதிக் கொள்கின்றன. இந்தத் தொடரில் முதலில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் பேட்டிங் செய்த, வெஸ்ட்  இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன்பின் முதல் இன்னிங்சில் களமிறங்கிய இலங்கை அணி ,2வது நாள் ஆட்டத்தின்  முடிவில்  3 விக்கெட் இழப்பிற்கு, 136 ரன்களை எடுத்தது.

இதன்பின் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தில், இலங்கை அணி 218 ரன்கள்  பின்தங்கி   7 விக்கெட் என்ற நிலையில் விளையாடியது. ஆனால் நேற்று நடந்த ஆட்டத்தில், மழை பெய்ததால் தொடரில்  பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு , 250 ரன்கள் எடுத்த போது ,மழையின் காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்திவைக்கப்பட்டது . இந்த போட்டியானது 7வது முறையாக மழையால் தடைப்பட்டது.

Categories

Tech |