Categories
கிரிக்கெட் விளையாட்டு

வெஸ்ட் இண்டீஸ் அணி சிறப்பான ஆட்டம்…. ஆப்கானுக்கு 312 ரன்கள் இலக்கு..!!

வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்துள்ளது 

உலக கோப்பை 42- வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடி வருகிறது. இப்போட்டி ஹெட்டிங்லே மைதானத்தில் மாலை 3 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.  இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும், எவின் லீவிசும் களமிறங்கினர். கிறிஸ் கெய்ல் வழக்கம் போல் 7 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து ஷாய் ஹோப்பும், எவின் லீவிசும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக ஆடி ரன்கள் சேர்த்தது. இருவரும் அரைசதம் அடித்தனர்.  அதன் பின் எவின் லீவிஸ் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஹெட்மேயர் தனது பங்குக்கு அதிரடியாக ஆடி 39 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து ஷாய் ஹோப்பும் 77 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து மிடில் வரிசையில் நிக்கோலஸ் பூரனும், ஜேசன் ஹோல்டரும் ஜோடி சேந்தனர். இருவரும் நிலைத்து ஆடினர். கடைசியில் இருவரும் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கடைசி ஓவரில் பூரன் 58 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 45 ரன்களும் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர்.

அடுத்து இறங்கிய பிராத்வேய்ட் 1 சிக்ஸர்,  2 பவுண்டரியுடன் 14 ரன்கள்  விளாசினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 311 ரன்கள் குவித்தது. ஆப்கான் அணியில் அதிகபட்சமாக ஐட்ரான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 312 ரன்கள் இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

Categories

Tech |