பிங்கி என்ற மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பெண் குளியலறையில் அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் கிடந்தார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிங்கி என்ற பெண் தனது கணவரை பிரிந்து கிருஷ்ணபகதூர் என்பவருடன் சென்னையிலுள்ள அண்ணா நகரில் வாடகை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தார். டாட்டூ வரைதல், சேலை விற்பனை போன்ற தொழிலை செய்து வந்த நிலையில், பிங்கி நேற்றிரவு வீட்டு குளியலறையில் கொல்லப்பட்டு கிடந்தார். இது குறித்து திருமங்கலம் போலீசாருக்கு கிருஷ்ணபகதூர் தகவல் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அடித்து கொல்லப்பட்ட பிங்கியின் உடலை கைப்பற்றினர்.மேலும் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த பகுதியில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இரு நபர்கள் பிங்கியின் வீட்டுக்குள் வந்து செல்வது பதிவாகியிருந்தது.CCTV வீடியோவை வைத்து அந்த இரு நபர்களையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கிருஷ்ணபகதூரிடமியும் விசாரனை செய்து வருகின்றனர். இந்த கொலையானது கொள்ளை முயற்சியில் நடந்ததா அல்லது கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். பிங்கி கடைசியாக யார் யாருடன் செல்போனில் பேசியுள்ளார் என்ற விவரங்களும் சேகரித்து வருகின்றனர்.