இளம்பெண் ஒருவரின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தில் சமீப காலமாகவே பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக வன்கொடுமைகள் நடைபெற்று வருகிறது. மிகவும் கொடூரமான முறையில் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இதேபோன்று தற்போதுஉத்திரபிரதேசத்தில் நெஞ்சை பதற வைக்கும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. படான் மாவட்டத்தில் கோயிலுக்கு சென்று வருவதாக கூறிய ஒரு இளம்பெண் ஒருவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் இருந்துள்ளார்.
இதனை அடுத்து அவருடைய பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் அந்த பெண்ணை காரில் ஒரு டிரைவர் உள்பட 3 பேர் அழைத்து வந்து கிராமத்தில் விட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். இதனால் ரத்தம் சொட்ட சொட்ட கிடந்த அந்த பெண்ணை மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால் போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது .
பிரேத பரிசோதனையின் முடிவில், அந்த பெண்ணின் பிறப்புறுப்பில் இரும்பு கம்பியை நுழைத்து கொடூரமாக வன்கொடுமை செய்ததும், மேலும் பெண்ணின் விலா எலும்புகள் உடைக்கப்பட்டும், நுரையீரலில் கனமான பொருளை கொண்டு அடித்ததால் நுரையீரல் பாதிக்கப்பட்டும் இருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து குற்றவாளிகளான கார் டிரைவர் ஜாஸ்பால், பாபா சத்யநாராயணன், வேதராம் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இந்த கொடூர சம்பவத்தை பார்க்கும் போது 2012 ஆம் வருடம் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் காட்டுமிராண்டித்தனமான மிருகங்களால் வேட்டையாடப்பட்டு கொடூரமாக பிறப்புறுப்பில் இரும்பு கம்பி சொருகப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை நினைவுபடுத்துகிறது. இது போன்ற கொடூரமான மிருகங்களுக்கு அரசு கடுமையான சட்டங்களை இயற்றுவது எப்போது…??