ஈரமான ரோஜாவே சீரியல் நடிகையின் திருமணக்கோல புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.
பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்தவகையில் கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் ஈரமான ரோஜாவே. இந்த சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் சின்னத்திரை இளம் நடிகை பவித்ரா தனது திறமையான நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது அழகிய திருமண கோலத்தில் போட்டோ ஷூட் எடுத்து அதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்தப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் தங்களது லைக்குகளை அள்ளிக் குவித்து வருகின்றனர்.