அமெரிக்காவில் மீனவர் ஒருவரை திமிங்கலம் விழுங்கி 40 வினாடிகள் வயிற்றுக்குள் வைத்திருந்து வெளியேற்றிய சம்பவம் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள Massachusetts என்ற மாகாணத்தின் Provincetown என்ற பகுதியில் வசிக்கும் 56 வயது நபர் Packard. Provincetown நகரானது 90 சதவீதம் கடலால் சூழப்பட்டது. லாப்ஸ்ட்டர் என்ற ராட்சத இறால்களை ஆழ் கடலுக்குள் சென்று பிடிப்பது தான் Packard-ன் தொழில். இதனை இவர் கடந்த 40 வருடங்களாக செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காலையில், Cape Cod என்ற கடலில் லாப்ஸ்ட்டர் டைவிங் செய்து வழக்கம் போல் தன் பணியை செய்து கொண்டிருக்கையில், தான் திமிங்கலம் அவரை விழுங்கியுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ” என்னை ஏதோ விலங்கு பயங்கரமாக இடித்தது.
அடுத்த சில வினாடிகளில் அந்த இடம் முழுவதும் இருளடைந்து விட்டது. அதன்பிறகு தான் great white sharks எனும் சுறா மீன்கள் அதிகம் திரியக்கூடிய இடம் என்று உணர்ந்தேன். சுறா என்னை விழுங்கி விட்டதாக எண்ணினேன். எனினும் என் அருகில் பற்கள் இல்லை என்பதை உணர்ந்தேன்.
திமிங்கலத்தின் வாயில் இருந்தேன். என்னை அது விழுங்க முயற்சித்தது. இனி வாழ்க்கை முடிந்ததாக நினைத்து மனைவியையும் மகன்களையும் நினைத்து பார்த்தேன். ஆனால் சில நொடிகளில் கடலின் மேற்பரப்பை அடைந்தேன். என்னை திமிங்கிலம் விடுவித்துவிட்டது.
நான் உயிர் பிழைத்ததை நம்ப முடியவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இவரை சுமார் 30 லிருந்து 40 வினாடிகள் திமிங்கலம் தன் வயிற்றில் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரோடு மீன்பிடிப்பதற்காக சென்றவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
நல்லவேளையாக அவருக்கு காயங்கள் எதுவும் இல்லை. எனினும் அவரின் கால் எலும்பு நகர்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 டன் எடை கொண்ட Humpback திமிங்கிலம் தான் அவரை விழுங்கியுள்ளது. இதுகுறித்து வல்லுநர்கள் கூறுகையில், திமிங்கிலங்கள் மனிதர்களை விழுங்கியதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.
அவ்வாறு கேள்விப்படவுமில்லை. இது தற்செயலாக நடந்த நிகழ்வு. அதாவது இந்த திமிங்கிலம் வாய் முழுவதையும் பிளந்து கொண்டு மொத்த மீன்களையும் பிடிப்பதற்காக முயற்சி செய்த போது Packard காலை விழுங்கியிருக்கும். எனவே தான் சில நேரங்களில் அவரை வெளியேற்றி விட்டது என்று கூறியுள்ளார்கள்.