ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய ஒரு பொருளால் இளம்பெண்ணுக்கு அதிர்ஷ்டம் அடிக்குமா என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்..
ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லேண்டிலுள்ள (Queensland) உரங்கன் (Urangan) கடற்கரையில் அலையில் இழுத்து வரப்பட்டு வழுவழுவென பெரிய பொருளொன்று கரை ஒதுங்கியுள்ளது.. இதனை கண்ட அந்த இளம்பெண் ஒருவர் இந்த பொருள் என்னவென்று தெரியாத நிலையில், இதை கண்டுபிடித்து தனக்கு சொல்லுங்கள் என்று போட்டோவை பேஸ்புக்கில் பகிர்ந்தார்.
இதை பார்த்த பலரும் அம்பர்கிரிஸ் (Ambergris) ஆக இருக்கலாம் என கமெண்ட் செய்து வந்தனர். அம்பர்கிரிஸ் வாசனை திரவியங்களுக்கான தொழிற்சாலையில் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஒரு கிராமுக்கான விலை மட்டும் 18 யூரோவாகும் (இந்திய மதிப்பு ரூ 1,529.66 ). 2016ஆம் ஆண்டு கரை ஒதுங்கிய அம்பர்கிரிஸ் மட்டும் 800,000 டாலருக்கு (இந்திய மதிப்பு 6,0025,200.00 ) விலை போனது.
திமிங்கலத்தின் குடலுக்குள் உருவாகும் இந்த எச்சத்திற்க்கு (பொருளுக்கு) மவுசு ரொம்ப ரொம்ப அதிகம் என்று பலரும் கமெண்ட் செய்ய மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார் இளம்பெண்.
எனினும் கடல் பன்றியின் இறைச்சியாக கூட இந்த பொருள் இருக்கலாம் என்று பேராசிரியரான சாண்டி டெக்னன் (Sandie Degnan) தெரிவித்துள்ளார். மேலும் அந்த பொருளை நேரடியாக அருகில் நின்று பார்த்தால் மட்டுமே என்னவென்று சரியாக கணிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.