தமிழகம் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்தே முக. ஸ்டாலின் வெள்ளம் பாதித்த பகுதிக்கு வந்ததாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முக கவசம் அணிந்து, மிகப்பெரிய பாதுகாப்பு கவசத்துடன் ஸ்டாலின் புயல் பாதித்த பகுதிக்கு வந்தார். வெள்ளத்தில் பார்வையிட யாரு வந்தாலும் பாராட்டத்தான் செய்வோம். எடப்பாடியார் களத்துக்கு போயிட்டார் என்று சொன்னவுடனே… அமைச்சர் எல்லாம் பேரிடர் நிவாரண பணியில் ஈடுபடுகிறார்கள் என்று தெரிந்த உடனே வேற வழி கிடையாது வந்து தானே ஆகணும்.
பிறரைப் பார்த்து வரக்கூடியது சேவை கிடையாது. தானாக சேவை செய்ய வரவேண்டும். மழை வருது வருது, புயல் வரும் தெரியுமில்ல. தேவையான நடவடிக்கையை முதலே எடுக்கணும். முதலமைச்சர் செம்பரம்பாக்கம் ஏரி போய் நிற்கிறார். அணைக்கட்டு மேலவை நின்னுக்கிட்டு இருக்காரு என்ற தெரிஞ்ச உடனே ஸ்டாலின் ஓடி வராரு. இது சேவை கிடையாது. தேர்தலுக்காக தேவை என்பதால் ஸ்டாலின் பார்வையிடுகின்றார் என அமைச்சர் கூறியுள்ளார்