Categories
உலக செய்திகள்

என்னது…80 வயசு தாத்தாவுக்கும்,29 வயசு மாணவிக்குமா… காதலை வளர்த்து திருமணம். வைரலாகும் புகைப்படம்…!

காதலுக்கு வயது வித்தியாசம் தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் இங்கு ஒரு ஜோடிகள் வாழ்ந்து வருகின்றனர்.

காதலுக்கு வயதில்லை என்றும், வயது வித்தியாசம் இல்லை என்றும் நாம் பல கவிதைகளில் படித்திருக்கிறோம். அதேபோல இங்கு ஒரு காதல் சம்பவம் நிகழ்ந்துள்ளது. தென் ஆப்பிரிக்கா கேப்டவுனை சேர்ந்த 29 வயதுடைய டெர்ஸல் என்ற பெண் 80 வயதுடைய வில்சன் ராஸ்மஸ் என்ற முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இதுகுறித்து காதலி டெர்ஸல் கூறியதாவது, அவர் என்னை மிகவும் அழகாக கவனித்துக்கொள்வார். நான் அவரின் முதல் முதலாக கடந்த 2014 ஆம் ஆண்டு செய்தித்தாள் நிகழ்ச்சி ஒன்றில் பார்த்தேன். அவருக்கு பேரக்குழந்தைகளும் உள்ளனர். இருப்பினும் அவரை நான் முதல் நாள் சந்தித்ததிலேயே எங்களுக்குள் ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது.

முதல்நாள் சந்தித்த அந்த நிகழ்ச்சியின் போது அவர் என் அருகில் வந்து உட்காரலாமா என்று கேட்டார். அதன்பின் நாங்கள் பேசி பழகினோம். பின்பு ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொண்டோம் என்று தெரிவித்தார். இவர்களது திருமணத்திற்கு இருவீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இந்த காதல் தம்பதியினர் தற்போது ஒன்றாக வசித்து வருகின்றனர்.

டெர்ஸல்க்கு தேவையான படிப்பு செலவை வில்சன் ராஸ்மஸ் செய்து வருகிறார். இவர்கள் வெளியில் சென்றால் பலபேர் இவர்களை மகள் தந்தை என்று தான் கூறுவார்கள். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் தங்கள் காதல் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

Categories

Tech |