Categories
சினிமா தமிழ் சினிமா

என்ன ஒரு தெய்வீக சிரிப்பையா உமக்கு…. சதீஷை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்…. வைரலாகும் ட்விட்டர் பதிவு…!!!

நடிகை பிரியா பவானி சங்கர் காமெடி நடிகர் சதீஷை கிண்டல் செய்துள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாணம் முதல் காதல் வரை சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியா பவானி சங்கர். இதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான மேயாதமான் படத்தின் மூலம் பிரியா பவானி சங்கர் ஹீரோயினாக அறிமுகமானார்.

தற்போது பிசியாக நடிகையாக வலம் வரும் பிரியா பவானி சங்கர் ருத்ரன், பத்து தல, AV33 உள்ளிட்ட ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரியா பவானி சங்கர் அவ்வப்போது தனது புகைப்படத்தை அதில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் அவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். தற்போது அதேபோல் சதீஷின் புகைப்படத்தை பார்த்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்துள்ளார். அதில் “என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு. இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |