Categories
சினிமா தமிழ் சினிமா

“என் கூட நடிங்க” எம்மா இதென்ன காமெடி…. வடிவேலு உங்க கூடவா…? மீராவை விளாசும் ரசிகர்கள்…!!

சமீபத்தில் நண்பேண்டா வாட்ஸப் குழுவின் நண்பர்கள் சந்திப்பு சென்னையில் நடந்த போது  கலந்துகொள்ளாத வடிவேலு வந்தது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. இதையடுத்து அவர் பேசியபோது “உள்ளத்தில் நல்ல உள்ளம்” பாடலை பாடி வஞ்சத்தில் வீழ்ந்தாயடா என்ற வரி வந்தபோது கண்கலங்கினார். இதையடுத்து சற்று நேரம் அமைதியாக நின்று அவரை பார்த்து மற்றவர்களும் கண்கலங்கியுள்ளனர். வடிவேலு நடிக்காவிட்டாலும் மீம்ஸ் மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கும் வடிவேலு இப்படி ஆகிவிட்டாரே என்று பலரும் வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் மீரா மிதுன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “வடிவேலுவின் லேட்டஸ்ட் பேட்டியை நான் பார்த்தேன். வஞ்சத்தில் வீழ்ந்தாயடா? என்று ரொம்ப பீல் பண்ணி பேசினார். வஞ்சம் எப்போதும் நல்லவர்கள் பக்கம் தான் நிற்கிறது. நான் தெனாலிராமன் படத்தின் ரசிகை. அந்த மாதிரி ஒரு நடிப்பை நான் பார்த்ததே கிடையாது. நிறைய பேர் நடிப்பு என்றால் என்னவென்று தெரியாமல் ஹீரோவாக இருக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடைய சொந்த தயாரிப்பில் நிறைய பிராஜெக்ட் செய்து வருவதாகவும் அந்த படத்தில் நடிக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால் அது எனக்கு கௌரவம். ஆனாலும் எப்படி தொடர்பு கொள்வது தெரியவில்லை? என்று வடிவேலுக்கு தன்னுடன் நடிக்க அழைப்பு விடுத்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் வடிவேலு ரசிகர்கள் கடுப்பாகி உள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, வடிவேலின் நிலைமை அந்த அளவிற்கு மோசமாக இல்லை.

அவர் உங்களை போன்ற கேவலமானவர்கள் கூட நடிக்க மாட்டார். யார் யாருக்கு வாய்ப்பு கொடுப்பது? உங்களுக்கே வாய்ப்பு இல்லையாம் இதில் வடிவேலு ,காமெடி என்றும், கொடுமை சார் இது. வடிவேலு உங்கள் படத்தில் நடித்தால் அவர் வாழ்க்கை நாசமாய் போய்விடும் உங்களுக்கு சூர்யா ஒரு வாய்ப்பு கொடுத்து பட்ட பாடு போதாதா? என்று கொந்தளித்துள்ளனர்.

https://twitter.com/i/status/1363399857562546177

https://twitter.com/i/status/1363432463377133569

Categories

Tech |