Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

என்ன ரொம்ப கொடுமை படுத்துனாங்க… அதுனால தான் கொலை செய்தேன்… சேலம் பெண்கள் சிறையில் அடைத்த போலீசார்…!!

நாமக்கல் மாவட்டத்தில் கொலை வழக்கில் கைதான பெண்ணை சேலம் பெண்கள் சிறையில் அடைக்க குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நாமக்கல் மாவட்டம் நடராஜபுரம் 4வது தெருவில் ஜானகி என்பவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 21ஆம் தேதி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில் ஜானகியின் வீட்டில் வேலைபார்த்து வந்த ஜெனிபர் என்ற பெண் திடீரென மாயமாகியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த அடைந்த போலீசார் ஜெனிபரை கண்டுபிடித்து கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இந்நிலையில் தூத்துக்குடியை சேர்ந்த ஜெனிபர் ஜானகியை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும் ஜானகி எனக்கு தரவேண்டிய சம்பளம் தராமல் வீட்டில் அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஜெனிபர் ஜானகியின் முகத்தை தலைகாணியால் அழுத்தியும், கல்லால் தாக்கியும் கொலை செய்துள்ளனர். இதனையடுத்து அவர் காதில் அணிந்திருந்த தங்க கம்மல் மற்றும் வீட்டில் இருந்த ஹோம் தியேட்டர் போன்ற பொருட்களை எடுத்து தப்பியோடியதாக கூறியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் ஜெனிபர் மீது வழக்குப்பதிவு செய்து நாமக்கல் முதலாவது குற்றவியல் நீதிபதி ஜெயந்தி முன்பு ஆஜர்படுத்தி அவரை சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைத்துள்ளனர்.

Categories

Tech |