கமிட்டெட் வாழ்க்கையை விரும்பும் இளைஞர்களுக்கு அந்த வாழ்க்கையில் எந்த மாதிரியான மகிழ்ச்சி கிடைக்கிறது…!!
சிங்கிள் சிங்கிள் என்று கூறிக்கொண்டு ஒண்டிக்கட்டை ஆக இருப்பதை விட கமிட்டெட் ஆக ஒரு பெண்ணுடன் வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள சில இளைஞர்கள் நினைக்கின்றனர். கமிட்டாகி இருப்பவரை கவனித்துக்கொள்ள எப்போதும் ஒரு பெண் இருப்பார் அவர் அந்த ஆணின் சுகத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வார். சில சமயங்களில் உடல் சரியில்லாத நேரத்திலும் கூட அருகில் இருந்து அன்புடனும் அரவணைப்புடனனும் பார்த்துக்கொள்வார்.
காதல் திருமணம் என்றாலே எல்லோருக்கும் ஞாபகம் வருவது செக்ஸ் மட்டும் தான் ஆனால் அதையும் தாண்டி பல சந்தோஷமான விஷயங்கள் இருக்கின்றன.ஒரு ஆணும் பெண்ணும் உடலால் இணைவது காதல் அல்ல உணர்வால் இணைவதுதான் காதல்.தான் விரும்பும் பெண்ணோடு விரும்பிய இடத்திற்கு சென்று இருவரும் அன்பை பரிமாறிக்கொள்வது என்பது அந்த உணர்ச்சியை வார்த்தையால் வர்ணிக்க இயலாது.இந்த மாதிரியான உண்மையான காதலில் சந்தேகம் தனிமை மனசுமை போன்றவற்றிற்கு இடமில்லை.இவர்களுக்கு ஒரு மணிநேரம் பார்க்காமலோ,பேசாமலோ பிரிந்திருப்பது என்பது ஒரு யுகம் போல தோன்றும்.இதுபோன்ற காதலர்களுக்கு பிரிவு என்பது இல்லை உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் மனதால் என்றும் ஒன்றாகவே தான் இருப்பர்.அடிக்கடி வரும் சிறு சிறு அன்பு சண்டைகள் கூட எவ்வளவுதான் அழகு.மேலும் விரும்பிய உணவை இருவரும் பகிர்ந்தளித்து உண்ணும் போது கிடைக்கும் மகிழ்ச்சி அதற்கு ஈடு இல்லை.
இதுபோன்ற கமிட்டெட் வாழ்க்கையில் தனிமை என்பதற்கு இடமே இல்லை சிறிது நேரம் பேசாமல் பிரிந்து இருக்க முடியாது பகல் இரவு என பாராமல் தங்களுடைய சுகதுக்கங்களை கேட்பதற்கு ஒரு பெண் இருக்கிறார் என்று ஒரு மன நிம்மதி இருக்கும் ஒரு ஆணும் பெண்ணும் உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வது என்பது பார்க்க எவ்வளவு தான் அழகு .மொத்தத்தில் கமிட்டெட் வாழ்க்கை என்பது தன்னுடைய வாழ்க்கையை தன்னை விட மேலாக நம்பக்கூடிய ஒருவரிடம் ஒப்படைப்பது.அதாவது தனக்குப் பிடித்த ஒன்றை தன்னை விட மேலாக நம்பக்கூடிய ஒருவருக்கு விட்டுக்கொடுத்து வாழ்வதாகும்.மொத்தத்தில் காதல் என்பது அழிவற்றது அன்பின் உச்சம்.ஆணும் பெண்ணும் சமம் என்பதை உணர்த்த காதல் போதுமானது.முகஅழகை பார்த்து வருவது காதல் அல்ல மன அழகை பார்த்து வருவதுதான் உண்மையான காதல்.